Project - விவசாயம்

Welcome to Koodugal (கூடுகள்)
- விவசாயம்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் புதியதாக தோன்றும் எந்த ஒரு விஷயத்திற்கும், அவன் கடந்து வந்த பாதையில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வு தான் காரணமாக இருக்க முடியும் என்பதை மறுக்க முடியாது

கூடுகளின் - விவசாயம்

எங்கள் *கூடுகள்* என்கின்ற குடும்பத்தில் எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வின் எதிரொளியாக உருவானது *கூடுகள் விவசாயம்* என்ற மற்றுமொரு சிறிய புதிய முயற்சி.

கூடுகள் குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த ஒரு விபத்து, விபத்திலிருந்து மீண்டு வரும் காலகட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் எந்த அளவுக்கு இன்னல்களை தினந்தோறும் சந்திப்பார்கள் என்பதை உணர்வு பூர்ணமாக அனுபவித்துள்ளோம். கூடுகள் அமைப்பில் அனைவரின் ஆலோசனைக்கு பின்பு இன்றுமுதல் மாற்றுத்திறனாளியாக இருக்கும் மனிதர்களுக்கு தங்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து கிடைக்கும் பொருட்களை முடிந்த அளவிற்கு பகிர்ந்து கொள்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் தொடக்கமாக வைகாசி பட்டம் நெல் பயிரிடப்பட்டு அதில் கிடைக்கும் நெல் மட்டுமின்றி மற்ற பொருட்களையும் சேர்த்து மாற்றுத்திறனாளியாக இருக்கும் மனிதர்களுக்கு முடிந்த உதவியை செய்து கொடுக்கயிருக்கிறோம். நம்மில் சில பேர் நம் குடும்பத்தில் பிறந்தநாள் அல்லது திருமண நாள் ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை அன்று ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் முதியோர் இல்லத்திற்கு வழங்குவது வழக்கமாக வைத்துள்ளோம்.

நாம் அளிக்கின்ற ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் ஒரு வேலை உணவை மட்டும் பூர்த்தி செய்யும் ஆனால் அதனை விவசாயம் செய்கின்ற *கூடுகள்* அமைப்பிடம் கொடுப்பதன் மூலம் இரு மடங்கு நம்மால் உதவி செய்ய முடியும். வைகாசி பட்டம் நெல் நடுவதற்கான வேலையை ஏற்கனவே துவங்கிவிட்டோம். சரியான முறையில் பயிரிடப்பட்டு பதப்படுத்தப்பட்டு ஆறு மாதத்திற்கு பின்பு அரிசியாக தயார் செய்து உங்களுக்குத் தெரிந்த மாற்றத்திறனாளியாக இருக்கும் மனிதர்களுக்கு உதவுங்கள்.

இந்த புதிய சிறிய முயற்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிறர் கொடுப்பதற்காக காத்திருக்க வேண்டாம்

"நிதி திரட்டும்" புதிய முயற்சியை தொடங்கும் கூடுகல்

புகைப்பட தொகுப்பு

Our Recent Events

Home